கொப்பால்; கொப்பாலில் இருந்து சபரிமலைக்கு மாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள், 990 கி.மீ., பாதயாத்திரையை துவக்கி உள்ளனர்.
ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி சுமந்து, பொங்கலன்று சபரிமலையில் ஜோதி வடிவில் அய்யப்பனை தரிசனம் செய்கின்றனர். இதற்காக பலரும் கேப், பஸ்களில் பயணிக்கின்றனர்.
இதுபோன்று, கொப்பால் மாவட்டம் கங்காவதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள், அய்யப்பனுக்கு 48 நாட்கள் விரதம் துவக்கினர். நேற்று முன்தினம் பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
கங்காவதியில் இருந்து 990 கி.மீ., தொலைவில் உள்ள கேரள மாநிலம் சபரிமலைக்கு அய்யப்பனை தரிசிக்க, குருசாமி கிரண்குமார் தலைமையில் புறப்பட்டனர்.
தினமும் அதிகாலை 4:00 மணிக்கு பாதயாத்திரையை துவக்கி, 10:00 மணிக்கு முடிப்பர். காலை சிற்றுண்டி சாப்பிட்ட பின் ஓய்வெடுப்பர். மதியம் 3:00 மணிக்கு மீண்டும் பாதயாத்திரை துவக்கி, மாலை 6:00 மணிக்கு நிறைவு செய்வர்.
இப்படி தினமும் 35 முதல் 40 கி.மீ., துாரம் நடந்து செல்ல உள்ளனர். செல்லும் வழியில், உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
பின், தங்களிடம் உள்ள தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் பிடித்து கொள்வர். இரவில் ஆங்காங்கே தங்கி ஓய்வெடுப்பர். காலையில் மீண்டும் பாதயாத்திரை துவக்குவர். 28 நாட்கள் பாதயாத்திரையாக சென்று, ஜனவரி 15ம் தேதி சபரிமலையில் தோன்றும் ஜோதியை தரிசனம் செய்து விட்டு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
குருசாமி கிரண்குமார் தலைமையில் பாதயாத்திரை புறப்பட்ட அய்யப்ப பக்தர்கள். இடம்: கங்காவதி, கொப்பால்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement