‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன்.
சமீபத்தில் விஷால், எஸ். ஜே சூர்யாவை வைத்து ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் ஆதிக் ரவிசந்திரனும், சிவாஜி கணேசனின் பேத்தியும், நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவும் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இருவருக்கும் இன்று சென்னையில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு இருவரையும் வாழ்த்தியுள்ளனர். நடிகர் விஷாலும் திருமணத்தில் கலந்துக்கொண்டு வாழ்த்தி இருக்கிறார். தற்போது இவர்களது திருமணப்புகைப்படங்கள் இணையத்தில் வைராலகி வருகிறது. பலரும் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.