Attack on police station leaves 11 dead in Iran | போலீஸ் ஸ்டேஷனில் தாக்குதல் ஈரானில் 11 பேர் பரிதாப பலி

துபாய்: ஈரானில் போலீஸ் ஸ்டேஷன் மீது, பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்காசிய நாடான ஈரானின் சிஸ்டன் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தின் ராஷ்க் நகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மீது பிரிவினைவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், நேற்று திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் என, 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

பதிலுக்கு போலீசார் நடத்திய தாக்குதலில், சில பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், தாக்குதலை நடத்தியவர்க்ள ஜெய்ஷ் – அல் -அடல் என்ற பிரிவினைவாத குழு என தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்த பிரிவினைவாதிகள், 2019ல் பஸ் மீது நடத்திய தற்கொலை படை தாக்குதலில் புரட்சிகர காவல் படையை சேர்ந்த 27 பேர் கொல்லப்பட்டனர். கடந்த சில மாதங்களாக சன்னி இனத்தவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த பயங்கரவாதிகள் மற்றும் சிறிய பிரிவினைவாத குழுவினர், அரசுக்கு எதிராக பாதுகாப்பு படையினருடன் தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.