Opposition parties continue agitation: Adjournment of Parliament | எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: பார்லிமென்ட் ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நேற்று ஒத்தி வைக்கப்பட்ட பார்லிமென்ட் இன்று காலை வழக்கம் போல் கூடியது. லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சபாநாயகர் இருக்கை முன்பு பதாகை ஏந்தி கோஷம் எழுப்பினர். லோக்சபாவில் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விவாதிக்க வேண்டும். இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும். எம்.பி.,க்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, லோக்சபா கூடிய சில நிமிடங்களில் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

அதேபோல் ராஜ்யசபாவும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்ளை ராஜ்யசபா தலைவர் தனது அறைக்கு அழைத்துள்ளார். அப்போது, அவையை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

போராட்டம்

இதனிடையே நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்.பி.,க்கள் பார்லிமென்ட் வாயிலில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.