
டீசர் உடன் ரிலீஸ் தேதியை அறிவித்த லவ்வர் படக்குழு
'குட் நைட்' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் மணிகண்டன் 'லவ்வர்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குனர் பிரபு ராம் இயக்குகிறார். இதில் கவுரி ப்ரியா ரெட்டி, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ‛லவ்வர்' பட டீசர் உடன் இப்படம் 2024 பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.