பெங்களூரு, : கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை, 344 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில், கொரோனாவால் பெங்களூரில் இரண்டு நாட்களுக்கு முன் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து, அரசு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தியது. இந்நிலையில், கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில், 106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரில் 95, சாம்ராஜ் நகரில் 3, சிக்கமகளூரில் 4, தட்சிண கன்னடாவில் 5, மாண்டியாவில் 3, மைசூரில் 18, ராம்நகரில் 3, ஷிவமொகாவில் 7, துமகூரில் 2 என மொத்தம், நேற்று வரை மொத்தம் 344 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement