BJP, – MP, Pache Gowda retired from politics | பா.ஜ., – எம்.பி., பச்சேகவுடா அரசியலில் இருந்து ஓய்வு

பெங்களூரு : சிக்கபல்லாபூர் பா.ஜ., – எம்.பி., பச்சேகவுடா, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலில், சிக்கபல்லாபூர் தொகுதியில் பச்சேகவுடா, பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது மகன் சரத் பச்சேகவுடா, ஹொஸ்கோட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார்.

எனவே இம்முறை பச்சேகவுடாவுக்கு சீட் கொடுத்தால், வெற்றி பெறுவது கஷ்டம் என, கூறப்படுகிறது.சமீப நாட்களாக, இவர் கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சிக்கிறார். இந்நிலையில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

பெங்களூரு ரூரல், ஹொஸ்கோட்டில் பச்சேகவுடா கூறியதாவது:

இம்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடமாட்டேன். இது பற்றி பலமுறை கூறியுள்ளேன். எனக்கு தற்போது 82 வயதாகிறது. வயதானதால் அரசியல் தேவையில்லை என, தோன்றுகிறது. எனவே அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன்.

நான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியலில் இருக்கிறேன். பல ஏற்ற, இறக்கங்களை கண்டுள்ளேன். எம்.எல்.ஏ., – எம்.பி., மற்றும் அமைச்சராக பணியாற்றிய திருப்தி எனக்குள்ளது.

இவ்வாறு அவர்கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.