புதுடில்லி “‘மொபைல் போன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பான விபரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோர முடியாது’ என, புதுடில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
புதுடில்லியைச் சேர்ந்த கபிர் சங்கர் போஸ் என்ற வழக்கறிஞர், தன்னுடைய மொபைல் போன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதா? அப்படி கேட்கப்பட்டால் எந்த அமைப்பு ஒட்டு கேட்டுள்ளது என்ற விபரங்களை கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த புதுடில்லி உயர் நீதிமன்ற அமர்வு, சமீபத்தில் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
மொபைல் போன் ஒட்டுகேட்பது என்பது, நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, மற்ற நாடுகளுடனான நட்புறவு, பயங்கரவாதத்தை தடுப்பது என, பல காரணங்களுக்காக மத்திய அரசால் எடுக்கப்படும் முடிவு.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்காக எடுக்கப்படும் இந்த முடிவு குறித்த தகவல்களை வெளியிட முடியாது. அவை நாட்டுக்கு எதிராக அமைந்துவிடும்.
‘டிராய்’ எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் என்பது ஒரு ஒழுங்குமுறை ஆணையம் தான். மொபைல் சேவை அளிக்கும் நிறுவனங்களிடம் இருந்து, இது போன்ற தகவல்களை சேகரிக்க அதற்கு அதிகாரம் இல்லை.
தனிப்பட்ட நபர்கள், தங்களுடைய மொபைல் போன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதா என்ற தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோர முடியாது.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement