Christmas celebration in Ukraine after 100 years yesterday | உக்ரைனில் 100 ஆண்டுக்கு பின் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கீவ், ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உக்ரைனில் 100 ஆண்டுகால வழக்கத்தை மாற்றி, அங்குள்ள மக்கள் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துஉள்ளது.

ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வரும் சூழலில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்பதுடன், ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், போர் மேகங்கள் சூழ்ந்துள்ள உக்ரைன் நாட்டில் முதன்முறையாக டிச., 25ல் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

ரஷ்ய போருக்கு முன் வரை, ரோமானிய கால ஜூலியன் நாட்காட்டியின்படி ஜன., 7ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ரஷ்யா கொண்டாடி வந்தது. இதை பின்பற்றி உக்ரைனும் கொண்டாடி வந்தது.

இந்நிலையில், ரஷ்யாவை எதிர்க்கும் வகையில் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை டிச., 25ம் தேதி கொண்டாட உக்ரைன் முடிவு செய்தது.

இதற்கான அறிவிப்பை அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி கடந்த ஜூலை மாதம் வெளியிட்டதுடன், அதற்கான சட்டத்தையும் இயற்றினார்.

இதன்படி, உக்ரைனில் உள்ள கிறிஸ்துவ மதத்தினர், 100 ஆண்டுகளாக பின்பற்றப்படும் வழக்கத்தை மாற்றி, முதன்முறையாக கிறிஸ்துமஸ் பண்டிகையை நேற்று உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.