வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத் கட்சி வரப்போகும் பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவ.26-ம் தேதி குஜராத் கடல் வழியாக ஊடுருவிய லஷ்கரே தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத் என தெரியவந்தது. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் ஹபீஸ் சையத்தின் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. தனது மகன் தல்ஹா சையத் மூலம் பொதுத்தேர்தலுடன் பல்வேறு மாகாணங்களில் உள்ள சட்டசபைகளிலும் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை களம் இறக்கவும் ஹபீஸ் சையத்திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement