Internet official arrested in pro-China propaganda case becomes approver | சீன ஆதரவு பிரசார வழக்கில் கைதான இணையதள அதிகாரி அப்ரூவராகிறார்

புதுடில்லி சீனாவுக்கு ஆதரவாகவும், நம் நாட்டுக்கு எதிராகவும் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில், ‘நியூஸ் கிளிக்’ இணைய செய்தி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர், ‘அப்ரூவராக’ மாற தயாராக உள்ளதாக மனு கொடுத்து உள்ளார்.

புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், நியூஸ் கிளிக் என்ற இணைய செய்தி நிறுவனம், நம் அண்டை நாடான சீனாவுக்கு ஆதரவாக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்துள்ளது.

மேலும், நம் நாட்டுக்கு எதிராகவும் அதில் செய்தி கள் வெளியாகின. இதற்காக வெளிநாட்டில் இருந்து பெருந்தொகை பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக புதுடில்லி போலீசின் சிறப்புப் பிரிவு விசாரித்தது. கடந்த அக்., 3ல் இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் உட்பட, 88 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த சோதனையில், 300க்கும் மேற்பட்ட மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நிறுவனத்தின் பத்திரிகையாளர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதுவரை, 46 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில், நியூஸ் கிளிக் நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை ஆசிரியருமான பிரபிர் புர்கயஸ்தா, மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது, மிகவும் கடுமையான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கேட்டு, அமித் சக்கரவர்த்தி, புதுடில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவருடைய தரப்பு வாதத்தை பதிவு செய்ய, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.