No Christmas Tree, No Joy In Bethlehem, Birthplace Of Jesus Christ | போரால் அமைதி: பெத்தலகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இல்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காசா: ஆண்டுதோறும் எப்போதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் இயேசு பிரான் பிறந்த பெத்தலகேமில் எவ்வித சிறப்பு கொண்டாட்டமும் நடக்கவில்லை. தேவாலயங்கள் , வீதிகள் ஆள் நடமாட்டமின்றி காணப்பட்டது. இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் காரணமாக பெத்லகேம் அமைதியாக காணப்பட்டது.

டிச.25 உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்து வருகிறது. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகின்றன. நள்ளிரவில் பெரும் திரளான மக்கள் குவிந்தனர்.

இயேசு பிரான் பிறந்த புகழ்பெற்ற ஜெருசேலம் பெத்தலகேம் நகர் பாலஸ்தீனத்தின் மேற்குகரையில் உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருவதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் தங்களின் வீடு மற்றும் உடமைகளை இழந்தனர். தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதால் இங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடப்படவில்லை.

கிறிஸ்துமஸ் விழாவில் பெத்தலகேம் பகுதியில் நேடிவிட்டி சர்ச்சில் கொண்டாட்டம் கோலாகலமாக இருக்கும். இஸ்ரேலியர்கள் உள்பட வெளிநாட்டு பயணிகள் லட்சக்கணக்கில் குவிவது வழக்கம் . ஆனால் போர் காரணமாக மக்கள் மிக குறைவாகவே காணப்பட்டனர். , கிறிஸ்துமஸ் அலங்காரம் காணப்படவில்லை. முக்கிய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது.

“இது போன்ற ஆள் அரவம் இல்லாத கிறிஸ்துமசை நாங்கள் பார்த்ததில்லை ஒரு விருந்தினர் கூட இரவு வரவில்லை” என இங்கு 4 தலைமுறையாக நட்சத்திர ஓட்டல் நடத்தி வரும் ஜோயி என்பவர் கூறினார்.

காசாவில் உள்ள கத்தோலிக் ஹோலி சர்ச்சில் உள்ள கன்னியாஸ்திரி நபீலாஷாலா கூறுகையில்; “இந்த ஆண்டு துயரம் ஏற்பட்டதால் கிறிஸ்துமஸ் கொண்டாடவில்லை, ஆலய மணி ஓசைக்கு பதில் டாங்கிகள் குண்டுகளை வெடிக்கும் சப்தம் கேட்கிறது. இதன் மத்தியில் எங்களால் எப்படி கிறிஸ்துமஸ் கொண்டாட முடியும். போர் விரைவில் முடிவுக்கு வர பிராத்திக்கிறேன் ” என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.