வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (99வது) பிறந்த நாளில் டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் , ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ,பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அங்கு நடந்த இசையாஞ்சலி நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்றனர்.
அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பல்வேறு முன்னேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தற்போது அனைவராலும் போற்றப்படும், பயன்படும் வகையிலான பைபாஸ் நாற்கர சாலை பெரும் வரவேற்பை பெற்றது. குமரி முதல் காஷ்மீர் வரை உருவான சாலை பெரும் பயனுள்ளதாக அமைந்தது.
வளர்ச்சிக்காக உழைத்தார்
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: நாட்டின் அனைத்து குடும்ப உறுப்பிரன்கள் சார்பாக, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தனது வாழ்நாள் முழுவதும் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டு ஆகும் 2047-ன் அம்ரித் கால் நோக்கத்திற்கு வாஜ்பாயின் அர்ப்பணிப்பு மற்றும் அவரின் தூய்மையான பணி உத்வேகமாக இருக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement