திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண டோக்கன் விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்கியது. இந்த ஆண்டு (2023) வடகிழக்கு பருவமழை காலமான டிசம்பர் மாதத்தில், தமிழ்நாட்டில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவை சந்தித்துள்ளது. தமிழகத்தின் மறக்க முடியாத பேரிடர் ஆண்டாக 2023 அமைந்துவிட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை மற்றும் 4 மாவட்டங்களை புரட்டிப்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ளத்தைத் தொடர்ந்து, டிசம்பர் 3வது வாரத்தில், தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, […]
