சேலம்: போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆர்.ஜெகநாதனை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம், நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அவர் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி வந்தார். பெரியார் பல்கலைக்கழகம் சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள செயல்பட்டு வருகிறது. சேலம் உள்பட அதனை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் 105 கலை […]
