தங்கவயல் : தங்கவயலில் இருந்து, 40 ஆண்டுகளாக, தமிழகத்தின் திருத்தணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். முருக பக்தர் ரமேஷ் தலைமையில் நேற்று 25 பக்தர்கள், மதியம் 1:00 மணிக்கு ராபர்ட்சன் பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு பூஜை செய்து, தங்கள் பயணத்தை துவங்கினர்.
ரமேஷ் கூறுகையில், ”தொடர்ந்து, 40 ஆண்டுகளாக பாதயாத்திரை சென்று வருகிறோம். வரும் 31ம் தேதி மதியம் 12:00 மணிக்கு திருத்தணி சென்று முருகனை வழிபடுகிறோம். அங்கு பூஜைகளை முடித்துவிட்டு, தங்கவயல் திரும்புகிறோம்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement