புதுடில்லி புதுடில்லியில் உள்ள இஸ்ரேல் துாதரகம் அருகே குண்டு வெடித்ததால் பீதி ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
புதுடில்லி சாணக்யபுரி பகுதியில் மேற்காசிய நாடான இஸ்ரேல் துாதரகம் உள்ளது. இதன் அருகே நேற்று மாலை 5:48 மணியளவில் திடீரென குண்டு வெடித்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு இஸ்ரேல் துாதர் பெயருக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று மீட்கப்பட்டது. குண்டுவெடிப்பை தொடர்ந்து துாதரகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீசார் கூறியதாவது:
மீட்கப்பட்டுள்ள ஒரு பக்க கடிதத்தை எழுதியது யார் என அறிய தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் எழுதியதில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு இங்குள்ள இஸ்ரேல் துாதரகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டு வெடித்தது. இதில் இஸ்ரேல் துாதரின் மனைவி காயம் அடைந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement