வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடக்க உள்ள தேர்தலில் கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தில் பொதுத் தொகுதியில் போட்டியிட முதன்முறையாக, சவீரா பிரகாஷ் என்ற ஹிந்து பெண் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளன. கைபர் பக்துன்க்வாவின் புனர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்து பெண் சவீரா பிரகாஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த சவீரா பிரகாஷின் தந்தை ஓம் பிரகாஷ், ஓய்வு பெற்ற டாக்டர் ஆவார். இவர் கடந்த 35 ஆண்டுகளாக பாகிஸ்தான் மக்கள் கட்சியில் (பிபிபி) உறுப்பினராக உள்ளார்.
சவீரா பிரகாஷ்
சவீரா பிரகாஷ் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் 2022ல் பட்டம் பெற்றவர். இவர் மக்கள் கட்சி மகளிர் பிரிவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். சவீரா பிரகாஷ் மகளிர் பிரிவு பொதுச் செயலாளராக பணிபுரியும்போதே சமூகம் சார்ந்து பல்வேறு விஷயங்களில் பங்கேற்றுள்ளார்.
தீர்வு காண்பேன்
”வளர்ச்சித் துறையில் பெண்கள் வரலாற்று ரீதியாக புறக்கணிக்கப்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன் என ஹிந்து பெண் சவீரா பிரகாஷ் உறுதி அளித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement