பெங்களூரு : அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் தத்தளிக்கும் பொது மக்களுக்கு, மற்றொரு சுமையாக, அரிசி விலை கிடுகிடுவென அதிகரிக்கிறது.
கர்நாடகாவில் ஆண்டுக்கு ஆண்டு, நெல் பயிரிடும் பரப்பளவு குறைகிறது. நடப்பாண்டு மாநிலத்தின் பல மாவட்டங்களில், மழை பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனால், நெல் பயிர்கள் பாழாகின. 50 சதவீதம் நெல் விளைச்சல் குறைந்ததால், அரிசி உற்பத்தி குறைந்து விலை அதிகரிக்கிறது.
கடந்தாண்டு இதே நேரத்தில், சோனா மசூரி அரிசியின் மொத்த விலை குவிண்டாலுக்கு 4,000 முதல் 4,200 ரூபாய் வரை இருந்தது.
நடப்பாண்டு 6,500 ரூபாய் முதல், 6,800 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
கடந்தாண்டுடன் ஒப்பிட்டால், கிலோவுக்கு 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
சில்லரை விலையில் சோனா மசூரி அரிசி விலை, கிலோவுக்கு 65 முதல் 70 ரூபாய், ஸ்டீம் அரிசி கிலோவுக்கு 60 முதல் 65 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கொல்லம் புல்லட் அரிசி கிலோவுக்கு, 75 முதல் 80 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. இது பொது மக்களுக்கு, சுமையைஏற்படுத்துகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement