
ஜன.2ல் ஏழு கடல் ஏழு மலை படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது
நீண்ட வருடங்களுக்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இதில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்கள் ஆகியும் விருது விழாக்களுக்கு அனுப்பபடுவதால் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் படத்தின் புதிய க்ளிம்ஸ்(முன்னோட்ட) வீடியோ 2024 ஜனவரி 2ம் தேதி அன்று மாலை 5.01 மணியளவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.