சென்னை,
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக அணி (தமிழ்நாடு) 5-2 என்ற கோல் கணக்கில் ஆதிகவி நன்னயா (ஆந்திரா) அணியை தோற்கடித்தது.
சென்னை பல்கலைக்கழகம் 3-0 என்ற கோல் கணக்கில் அழகப்பாவை வீழ்த்தியது. இதே போல் வேல்ஸ் ஐ.எஸ்.டி. (தமிழ்நாடு) 3-0 என்ற கோல் கணக்கில் பெரியார் மணியம்மை அணியை சாய்த்தது. புதுச்சேரி, பாரதியார், ஜேப்பியார், டி.என்.பி.இ.எஸ்., கேரளா, கோழிக்கோடு ஆகிய அணிகளும் வெற்றி கண்டன.
Related Tags :