வாக்காளர் அடையாள அட்டை வாங்கியாச்சா… ஆன்லைனில் ஈஸியாக விண்ணப்பிக்கலாம்!

How To Apply Voter ID Online: ஒவ்வொரு இந்திய குடிமக்களும் வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) பெற வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும். அதாவது 18 நிறைவடைந்து, வாக்களிக்க தகுதி உள்ள அனைவரும் வாக்காளர் அடையாள அட்டையை பெறலாம். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அவர்களின் 18 வயதுக்குப் பிறகு வாக்களிக்கும் உரிமையும் தகுதியும் உள்ளது. அப்படி வாக்களிக்க வேண்டும் என்றால் உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருப்பது அவசியம். வங்கிக் கணக்கு தொடங்குதல், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், அரசின் திட்டங்களின் பலன்களைப் பெறுதல் போன்ற பல அரசு மற்றும் அரசு சாரா சேவைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம். 

2024 மக்களவை தேர்தல் 

வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் (Lok Sabha Election 2024) நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் இந்தியாவின் தலை எழுத்தையே நிர்ணயிக்கவல்லது. குறிப்பாக, இந்த தேர்தலில் இளைஞர்களின் வாக்கு என்பதும் அவசியமாகிறது. நீங்கள் முதல்முறை வாக்காளராக இருக்கும்பட்சத்தில் வயது வரம்பை எட்டியவுடன் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பிற முக்கிய தகவல்கள் உள்ளன. இந்தத் தகவல் உங்களுக்கு முக்கியமானது, அதை பாதுகாப்பாக வைத்திருப்பதும் முக்கியமாகிறது. வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கான பாதுகாப்பான இடத்தையும் வழங்குகிறது. அந்த வகையில், வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பினால் அதற்கு தேவையான ஆவணங்கள், கட்டண விவரம், விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகியவற்றை இதில் காணலாம். 

விண்ணப்பிக்கும் வழிமுறை

ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடியிருப்பு சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் (ஆப்ஷனல்) ஆகியவை வாக்காளர் அடையாள அட்டையை விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆகும்.

– முதலில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு voterportal.eci.gov.in  செல்லவும்.
– “Apply Online For Registration Of New Voter” என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
– பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும்.
– உங்கள் ஆதார் அட்டை தகவல்களை உள்ளிட வேண்டும்.
– உங்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்.
– உங்கள் குடியிருப்பு சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்ற வேண்டும்.
– உங்களிடம் வருமானச் சான்றிதழ் இருந்தால், அதன் ஸ்கேன் செய்யப்பட்ட நகலையும் பதிவேற்ற வேண்டும்.
– “Submit” பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

விண்ணப்பித்த பின்னர், உங்கள் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்க, “Track Your Application Status” என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். இந்த விண்ணப்ப செயல்முறை முடிய சுமார் 30 நாள்கள் எடுக்கும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வாக்காளர் அடையாள அட்டைக்கான விண்ணப்பக் கட்டணம் 25 ரூபாய் ஆகும். இந்தக் கட்டணத்தை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனிலும் நீங்கள் செலுத்தலாம்.

கவனம் மக்களே….

வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது உங்கள் விண்ணப்பப் படிவத்தை கவனமாக நிரப்ப வேண்டும். நீங்கள் பதிவேற்றும் ஆவணங்கள் நல்ல தரமான நகல்களாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும், 25 ரூபாய் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும் மறக்காதீர்கள். 

என்ன நன்மை?

வாக்காளர் அடையாள அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இந்த செயல்முறை எளிதானது. அதுமட்டுமின்றி பலரின் நேரத்தையும் இந்த செயல்முறை மிச்சப்படுத்துகிறது. வெளியூரில் வேலைப் பார்ப்பவராகவோ அல்லது படிப்பவராகவோ இருந்தால் நீங்கள் உங்கள் சொந்த ஊருக்கு வர வேண்டும் என்பதில்லை. அதேபோன்று, அரசு அலுவலகங்களுக்கும் அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.