
விஜய் 68வது படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 68வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தாய்லாந்து, துருக்கி, ஐதராபாத் என பல லொகேஷன்களில் நடைபெற்று வருகிறது. விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, இவானா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது விஜய் 68வது படத்தில் ரம்யா கிருஷ்ணனும் இணைந்துள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். இதற்கு முன்பு ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.