பெங்களூரு : லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியை காங்கிரஸ் தலைவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடப்பதால், அனைத்து அரசியல் கட்சிகளுமே இப்போதில் இருந்தே தங்களை தயார்ப்படுத்தி வருகின்றன. தேசிய அளவில், தேசிய ஜனநாயக கூட்டணி, ‘இண்டியா’ கூட்டணி சார்பில் இன்னும் தொகுதி பல்கீடு பேச்சு நடத்தப்படவில்லை. ஜனவரிக்குள் இறுதியாகி விடும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கர்நாடகாவை பொறுத்தவரையில், 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த 2019ல், 25ல் பா.ஜ.,வும், தலா ஒன்றில் காங்கிரஸ், ம.ஜ.த., சுயேட்சை வேட்பாளர்களும் வென்றனர்.
அடுத்தாண்டு தேர்தலில், பா.ஜ., காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதற்கு திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
இதற்கிடையில், வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே தொகுதி வாரியாக அமைச்சர்கள் நேரில் சென்று, கட்சி பிரமுகர்களுடன் ஆலோசித்து தகவல் பெற்றுள்ளனர்.
உள்ளூர் மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களின் பட்டியல் பெற்றுள்ளனர். இந்த பட்டியலை விரைவில், மாநில தலைவரும், துணை முதல்வருமான சிவகுமாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.
ஜனவரியில் நடக்கும் மாநில அளவிலான வேட்பாளர்கள் தேர்வு கூட்டத்தில் உத்தேச பட்டியல் தயாரித்து, மேலிட ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement