ஹைதராபாத்: தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இதுகுறித்து நேற்று ஹைதராபாத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்பது தவறான செய்தியாகும். மேலிட உத்தரவு என்னவோ அதனை நான் செய்து வருகிறேன். நான் எப்பொழுதும் மக்களுடனே இருப்பேன். பிரதமர் மோடி மற்றும் ஸ்ரீராமரின் தயவால் நான் பணியாற்றி வருகிறேன். தென் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து விட்டு வந்தேன். அவ்வளவுதான்’’ என்றார்.