கேப்டவுன் ,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் அடுத்த மாதம் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி :
டீன் எல்கர் (கேப்டன் ), டேவிட் பெடிங்ஹாம், நந்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, ஜுபைர் ஹம்சா, மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, கீகன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , கைல் வெர்ரைன்.