இந்திய அணியால் எதையும் வெல்ல முடியாது… முன்னாள் இங்கிலாந்து வீரர் பகீர்!

India National Cricket Team: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலியா சேனலான Fox Sports-இல் கிரிக்கெட் குறித்த விவாதம் நடைபெற்றது. அதில், முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கெல் வாகன் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் ஆகியோர் பங்கேற்றனர். அந்த விவாத்தின்போது, கிரிக்கெட்டை பொறுத்தவரை உலகிலேயே மிகவும் பின்தங்கிய அணிகளில் இந்தியாவும் ஒன்று என்று நினைக்கிறீர்களா என மார்க் வாவிடம் (Mark Vaugh) வான் கேள்வி கேட்டார். மார்க் இதற்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. மேலும், அவர் அதே கேள்வியை வாகனிடம் எழுப்பினார். 

இன்னும் சாதித்திருக்க வேண்டும்

அப்போது பதில் அளித்த மைக்கெல் வாக் (Michael Vaughan),”சமீப காலமாக அவர்கள் பெரிதாக எதிலும் வெற்றி பெறவில்லை. அவர்கள் பின்தங்கிய அணியாக இருக்கிறார்கள் (Underachieving Team) என்று நினைக்கிறேன். அவர்கள் எதிலும் வெற்றி பெறுவதில்லை. அவர்கள் கடைசியாக எப்போது ஒரு கோப்பையை வென்றனர்? அவர்களிடம் உள்ள அனைத்து திறமைகளுடனும், அனைத்து திறன்களுடனும் அவர்கள் நிச்சயம் இன்னும் சாதித்திருக்க வேண்டும்” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர்,”அவர்கள் ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை பிரமாண்டமாக வென்றுள்ளனர் (2018/19 மற்றும் 2020/21 ஆகிய டெஸ்ட் தொடர்கள்). ஆனால் கடந்த சில உலகக் கோப்பைகளாக பெரிதாக வெற்றி பெறவில்லை. கடந்த சில டி20 உலகக் கோப்பைகளையும் அவர் பெரியளவில் சோபிக்கவில்லை. அவர்கள் ஒரு நல்ல அணி. அவர்களிடம் ஏராளமான திறமைகள் உள்ளன, ஆனால் அவர்களிடம் உள்ள அனைத்து திறமைகள் மற்றும் வளங்கள் மூலம், அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று அவர் கூறினார்.

தீராத தாகம்

இந்திய அணி (Team India) கடந்த 10 ஆண்டுகளில் ஒரு ஐசிசி கோப்பைகளையும் வெல்லாதது இதற்கு அடிதளமாக உள்ளது எனலாம். தோனி தலைமையில் 2013ஆம் ஆண்டு சாம்பின்ஸ் டிராபியைதான் இந்தியா கடைசியாக வென்றது. அதன்பின், பல தொடர்களில் நாக் அவுட் வரை வந்து, சாம்பியன் பட்டத்தை கோட்டைவிடுவது இந்திய அணிக்கு வழக்கமாகிவிட்டது எனலாம். 

குறிப்பாக, இந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை இந்திய அணி பெற்றது. சொந்த மண்ணிலும் தொடர் நடந்ததால் அனைத்தும் இந்திய அணிக்கு சாதகமாகவே இருந்தது, ஆனால் இறுதிப்போட்டியில் இந்தியா வழக்கம்போல் சொதப்பி கோப்பையை தவறவிட்டது எனலாம். எனவே, இந்திய அணியின் ஐசிசி கோப்பை தாகம் என்பது இந்த வருடமும் தீரவில்லை.

தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றாலும், டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை மீண்டும் தவறவிட்டுள்ளது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றதால் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா பின்தங்கியுள்ளது. இந்திய அணி இரண்டாவது போட்டியை வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய இயலும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.