சேரனின் ஜர்னி ஜனவரி 12 ஓடிடியில் வெளியாகிறது!
ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி போன்ற தரமான படங்களை மக்களுக்கு தந்தவர் சேரன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ஜெ.கே எனும் நண்பனின் வாழ்க்கை, திருமணம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால் கடந்த சில வருடங்களாக படம் இயக்குவதில் இருந்து விலகி இருந்தார்.
கடந்த சில மாதங்களாக சோனி லிவ் ஓடிடி தளத்திற்காக 'ஜர்னி' என்கிற புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கி வந்தார் சேரன். இதில் நடிகர் சரத்குமார், பிரசன்னா, ஆரி, கலையரசன், திவ்ய பாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 6 எபிசோடுகள் கொண்ட இந்த தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஜனவரி 12ம் தேதி அன்று வெளியாகும் என டீசர் உடன் அறிவித்துள்ளனர். இந்த டீசரில், ஒரு வேலைவாய்ப்புக்காக 5 நபர்கள் போட்டி போடுவது நோக்கி கதைக்களம் நகர்கிறது.