ஜனவரி 12ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சலார்!
கேஜிஎப், கேஜிஎப்-2 படங்களை அடுத்து பிரசாந்த் நீல் இயக்கி திரைக்கு வந்துள்ள படம் சலார். பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 22ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் திரைக்கு வந்த ஒரு வாரத்தில் 500 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இப்படத்திற்கு ஏற்பட்ட கலவையான விமர்சனங்கள் காரணமாக எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதனால் சலார் படத்தை திரைக்கு வந்து நான்கு வாரங்களுக்கு முன்பாகவே ஜனவரி 12ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஸ் என அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வந்த பிரபாஸுக்கு இந்த சலார் படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.