கேப்டவுன் ,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் அடுத்த மாதம் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த நிலையில் இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.