திருப்பதி:திருமலை திருப்பதியில் 2023ம் ஆண்டில் 2 கோடியே 52 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து 1,398 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
தொடர்ந்து 22-வது மாதமாக டிசம்பர் மாதத்திலும் ரூ.100 கோடியை உண்டியல் காணிக்கை வந்தது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக ரூ.129 கோடியும், நவம்பர் மாதத்தில் ரூ.108 கோடியும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர். டிசம்பர் மாதத்தில் பக்தர்கள் ,காணிக்கையாக ரூ.116 கோடி செலுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement