
68வது படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கை செல்லும் விஜய்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், பிரேம்ஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விஜய் 68வது படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட சில பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் 68வது படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுவதாக ஒரு செய்தி வெளியாகி வந்த நிலையில் தற்போது அது உறுதியாக இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பே இலங்கை சென்றுவிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு அங்கு படப்பிடிப்பை தொடங்குவதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இன்னும் சில தினங்களில் விஜய்யும் இலங்கைக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். தற்போது இலங்கையில் இருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவை அடையாளம் கண்டு கொண்ட இலங்கை ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.