வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ரஷ்யாவிடம் பெற்று இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட சுகோய் போர் விமானங்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உள்ளது இந்திய விமானப்படை.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானங்களை பெற்று இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது.தொடர்ந்து இந்த வகை விமானங்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரையில் பணி புரிந்துள்ளது.
இந்நிலையில் மேற்கண்ட போர் விமானங்களை மேலும் 20 ஆண்டுகள் வரையில் அதன் ஆயுளை நீட்டிக்க உள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக சுகோய்-30 எம்கேஐ விமானங்களின் ஏர்பிரேம் மற்றும் பிறபகுதிகள் சோதிக்கப்பட்டு வருகின்றன. இத்தகையை போர் விமானங்கள் கடற்படையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சுகோய்-30 எம்கேஐ பிரமோஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement