Bajaj Chetak Premium 2024 – ரூ.1.35 லட்சத்தில் 2024 பஜாஜ் சேட்டக் பிரீமியம் விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 126 கிமீ ரேஞ்ச் தரவல்ல சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரீமியம் 2024 வேரியண்ட் விலை ரூ.1,35,463 ஆக அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. முன்பாக சேட்டக் அர்பேன் 2024 வேரியண்ட் ஆனது 113 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துகின்ற மாடல் ரூ.1.15 லட்சம் ஆக உள்ளது.

மிக சிறப்பான ரெட்ரோ தோற்ற வடிவமைப்பினை பெற்ற சேட்டக் மாடலில் புதிதாக வந்துள்ள டாப் வேரியண்டில் 3.2kWh பேட்டரி பேக் கொண்டுள்ளது.

2024 Bajaj Chetak Premium

சேட்டக் பிரீமியம் வேரியண்ட் 3.2kWh பேட்டரி பெற்று அதிகபட்சமாக 126 KM ரேஞ்ச் வழங்கும் என IDC சான்றியளிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் டாப் ஸ்பீடு 73km/hr ஆகும்.   2.88kWh பேட்டரி பெற்ற சேட்டக் அர்பேன் 2024 மாடல் ரேஞ்ச் 113 கிமீ வரை வழங்குகின்றது. இதில் டெக்பேக் பெற்ற வேரியண்ட் வேகம் மணிக்கு 73 கிமீ கொண்டுள்ளது.

2024 பஜாஜ் சேட்டக் புதிய 5 அங்குல TFT டிஸ்பிளே கொண்டிருக்கும்.  மற்றபடி, டெக்பேக் எனப்படுகின்ற கனெக்ட்டிவிட்டி பெற உள்ள டாப் வேரியண்ட்  ஈக்கோ மற்றும் ஸ்போர்ட்ஸ் என இருவிதமான ரைடிங் மோடுகள் பெற்று ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் மோடு மற்றும் முழுமையான MyChetak ஆப் கனெக்ட்டிவிட்டி மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், இசை கட்டுப்பாடு, பயண விபரம், குறிப்பிட்ட எல்லையில் மட்டும் கட்டுப்படுத்தும் வசதி உள்ளது.

chetak-premium-vs-chetak-urbane-2024

2024 பஜாஜ் சேட்டக் பிரீமியம் ஸ்கூட்டருக்கு  ஹேசல்நட், கருப்பு மற்றும் இன்டிகோ மெட்டாலிக் என மூன்று நிறங்களை பெற்று ஆஃப் போர்டு சார்ஜர் 650w வழங்கப்படுகின்றது.

2024 Bajaj Chetak urbane STD – ₹ 1,15,000

2024 Bajaj Chetak urbane Tecpac – ₹ 1,23,001

2024 Bajaj Chetak premium – ₹ 1,35,463

2024 Bajaj Chetak Premium Tecpac – ₹ 1,43,465

(Ex-showroom Tamil Nadu)

bajaj chetak premium 2024 price

வரும் ஜனவரி 9 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு பஜாஜ் சேட்டக் 2024 மாடல் வெளியாக உள்ளது.

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.