Actor Premji: வேற லெவல்ல இருக்கும்.. தளபதி 68 அப்டேட் சொன்ன பிரேம்ஜி!

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 68 படம் விறுவிறுப்பாக சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப்படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், தாய்லாந்து ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் சூட்டிங்கிற்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சிறிது இடைவெளி விடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் சூட்டிங் மீண்டும் துவங்கப்படவுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா,

ரெயில் நிலையங்களில் செல்பி பூத் – ராகுல் காந்தி கிண்டல்

புதுடெல்லி, ரெயில் நிலையங்களில் பிரதமர் மோடியின் ஆளுயுர கட்-அவுட்களுடன் கூடிய செல்பி பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது மக்கள் பணத்தை வீணடிக்கும் செயல் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், செல்பி பூத் திட்டத்தை கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “சாதாரண மக்களை பாதிக்கும் வகையில், அனைத்து வகுப்பு ரெயில் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. பிளாட்பாரம் டிக்கெட் … Read more

புரோ கபடி லீக்; குஜராத் ஜெயன்ட்ஸ் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்..!

நொய்டா, 10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் நொய்டாவில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் – … Read more

பாலியல் புகார்; நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேன் குற்றவாளி – காத்மாண்டு கோர்ட்டு அறிவிப்பு

காத்மாண்டு , நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சேன். இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார். இந்த நிலையில் சந்தீப் லமிச்சேன் மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அந்த புகாரில், கடந்த ஆகஸ்ட் … Read more

Bajaj Chetak Premium 2024 – ரூ.1.35 லட்சத்தில் 2024 பஜாஜ் சேட்டக் பிரீமியம் விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 126 கிமீ ரேஞ்ச் தரவல்ல சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரீமியம் 2024 வேரியண்ட் விலை ரூ.1,35,463 ஆக அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. முன்பாக சேட்டக் அர்பேன் 2024 வேரியண்ட் ஆனது 113 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துகின்ற மாடல் ரூ.1.15 லட்சம் ஆக உள்ளது. மிக சிறப்பான ரெட்ரோ தோற்ற வடிவமைப்பினை பெற்ற சேட்டக் மாடலில் புதிதாக வந்துள்ள டாப் வேரியண்டில் 3.2kWh பேட்டரி பேக் கொண்டுள்ளது. 2024 Bajaj Chetak Premium சேட்டக் … Read more

Bigg Boss 7 Day 90: பூர்ணிமாவின் விநோதமான உடல்மொழி; அர்ச்சனாவை அர்ச்சனை செய்த விசித்ரா!

‘விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது?’ என்பது தொடர்பாக, இந்த எபிசோடில் பூர்ணிமாவிற்கு கமல் சொன்னது அத்தனையும் திருவாசகம். அது பூர்ணிமாவிற்கு மட்டுமல்ல, நமக்கும் கூட கச்சிதமாகப் பொருந்தும். அத்தனை சிறப்பான உபதேசம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதன் மதிப்பு பூர்ணிமாவிற்குத் தெரியவில்லை. எனவே வழக்கம் போல் கண்கலங்கி அமர்ந்திருந்தார்.பூர்ணிமா பிடிக்கும் முயலுக்கு கால்கள் மட்டுமில்லை, காதுகளும் கிடையாது போலிருக்கிறது. எதையுமே அது கேட்பதில்லை. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தி விட்டு … Read more

''பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனே அறிவிக்க வேண்டும்'' – தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயரம் தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்காமல் முழுக் கரும்பு என்ற அடிப்படையில், தமிழ்நாட்டு விவசாயிகளிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். ஒரு கரும்புக்கு ரூ.50 வீதம் விலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்”, என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆங்கிலப் புத்தாண்டு நாளை பிறக்கவிருக்கும் … Read more

அகத்தியர் குறித்த தமிழ் நூல்களை வெளியிடுகிறது மத்திய கல்வித்துறை: காசி தமிழ் சங்கமம்-2 இல் தகவல்

புதுடெல்லி: அகத்தியர் தொடர்பாக ஆய்வு செய்து தமிழில் நூல்களை வெளியிட மத்திய கல்வித் துறையின் பாரத மொழிகளின் அமைப்பு(பாரதிய பாஷா சங்கம்) திட்டமிட்டுள்ளது. இந்த தகவல், உத்தரப்பிரதேசம் வாரணாசியின் காசி தமிழ் சங்கமம்-2 இல் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட ஏழாவது சித்த மருத்துவ தினத்தில் வெளியாகி உள்ளது. நாட்டின் மிகப் பழமையானதாக சித்த மருத்துவம் உள்ளது. இது, மாமுனிவர் அகத்தியர் தலைமையிலான 18 சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி என்றெல்லாம் தமிழ் … Read more

பழம்பெரும் நடிகர் கலைமாமணி லியோ பிரபு காலமானார்

பழம்பெரும் நடிகர் லியோ பிரபு, வயது மூப்பு காரணமாக தன்னுடைய 90 வயதில் இன்று மாலை 4 மணிக்கு காலமானார். இந்த தகவல் திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.