Month: December 2023
ஜனவரி 15ல் நடைபெறுகிறது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி – அரசு சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்
மதுரை: அரசு சார்பில் நடத்தப்படும் தமிழகத்தின் முதல் போட்டியான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தொடங்கின. பாலமேடு, அலங்காநல்லூரிலும் வாடிவாசல், கேலரிகள் அமைப்பதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் பண்பாட்டையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள், தென் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும், மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக புகழ்பெற்றவை. … Read more
“நாட்டின் கலாச்சார அடையாளத்தை பாதுகாப்பது மத்திய அரசின் பொறுப்பு” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
டேஸ்பூர்: நாட்டின் எல்லைகளை மட்டுமல்லாமல், பாரதத்தின் கலாச்சார அடையாளத்தையும் பாதுகாப்பது மத்திய அரசின் பொறுப்பு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜாந்த் சிங் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள டேஸ்பூர் பல்கலைக்கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா இன்று (டிச.31) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: 2014ஆம் ஆண்டுக்கு முன், இந்தியா அதிக பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்தது. … Read more
பொங்கல் வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தென்மாவட்ட பேருந்துகள் விவரம்!
சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகை வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் 6 பகுதி அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. … Read more
ஜனவரி 12ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சலார்!
கேஜிஎப், கேஜிஎப்-2 படங்களை அடுத்து பிரசாந்த் நீல் இயக்கி திரைக்கு வந்துள்ள படம் சலார். பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 22ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் திரைக்கு வந்த ஒரு வாரத்தில் 500 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இப்படத்திற்கு ஏற்பட்ட கலவையான விமர்சனங்கள் காரணமாக எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் சலார் படத்தை திரைக்கு வந்து நான்கு வாரங்களுக்கு முன்பாகவே ஜனவரி 12ம் தேதி … Read more
Big boss 7: மற்றவர் திருமணத்திற்கு நாம் கவுன்சிலர் ஆக முடியாது.. விசித்ராவை வெளுத்து வாங்கிய கமல்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 7வது சீசனின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 91வது நாளை எட்டியுள்ளது. வாரயிறுதி எபிசோடான நேற்றும் இன்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் கமல்ஹாசன், நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக அரங்கேறிய பல பிரச்சினைகள் குறித்து
தலையங்கம்: இந்த ஆண்டின் சிறந்த கார்/பைக்குகளுக்கு வாழ்த்துகள்!
பைக் பிரியர்களுக்கு ஒரு மாபெரும் கொண்டாட்டமாக கடந்த மாதம் அமைந்தது. ராயல் என்ஃபீல்டு மோட்டோவெர்ஸ் முடிந்த அதே வேகத்தில் மோட்டோ சோல், இந்தியன் பைக் வீக், பல்சர் மேனியா என்று அடுத்தடுத்து பைக் திருவிழாக்கள் கோவாவிலும் மும்பையிலும் களைகட்டின. அந்த மகிழ்ச்சியை உங்களுக்கு நேரடியாகச் சேர்ப்பிக்கும் வண்ணம் நமது மோட்டார் விகடன் சேனலில் இந்தக் கொண்டாட்டங்கள் பற்றிய வீடியோக்களை நீங்களும் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள். அதே மகிழ்ச்சியோடு புத்தாண்டு பிறந்திருக்கிறது. “பூங்கொத்து நீட்டி வரவேற்கும் இந்தப் புத்தாண்டில் என்னென்ன … Read more
கோவை மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் ஜன. 29 வரை நீட்டிப்பு
கோவை: கோவை மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06030), வரும் ஜனவரி 28-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைதோறும், திருநெல்வேலியிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு கோவை … Read more
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா அதிவேகமாக வளர்கிறது – ஜெ.பி.நட்டா பெருமிதம்
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ், இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற “நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்” யாத்திரையில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது: சமூகத்துக்கு அநீதி இழைக்க அனைத்து முயற்சிகளையும் செய்தவர்கள் இன்று நியாய யாத்திரை என்ற பெயரில் கற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள், பெண்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் … Read more
பத்திரிகை டாட் காம் செய்தி தளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் (www.patrikai.com)-ன் செய்தி இணையதளத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. இயற்கையை நேசியுங்கள்; இயற்கையோடு நெருங்கியிருங்கள்; உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சகோதரத்துவமும் பரவட்டும் … இந்த புத்தாண்டில், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உங்கள் தொடர்புகளை பலப்படுத்துங்கள். அர்த்தமுள்ள உரையாடல்களுக்கும், ஒற்றுமை உணர்வை ஊக்குவிக்கும் செயல்களுக்கும் நேரத்தை ஒதுக்குங்கள். … Read more