கோயில்கள் தோறும் திருவாசகம் முற்றோதல் செய்யும் குழுவினர் – ஆறு ஆண்டுகளில் 250 முற்றோதல் நிகழ்ச்சி
மதுரை: கோயில்கள் தோறும் சென்று திருவாசகம் முற்றோதல் செய்யும் அறப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மதுரை வடக்கு நகரத்தார் சங்கத்தினர். 6 ஆண்டுகளில் 250 முற்றோதல் செய்யும் அறப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இறைவன் சிவபெருமான் அருளியதை மாணிக்கவாசகர் எழுதியது திருவாசகம். அந்த திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பர். அத்தகு திருவாசகம் முற்றோதலை அறப்பணியாகவும், ஆன்மிகப் பணியாகவும் செய்து வருகின்றனர் மதுரை வடக்கு நகரத்தார் சங்கத்தினர். அருளாளர் மாணிக்கவாசகர் பிறந்த மகம் நட்சத்திரத்தில் மாதந்தோறும் திருவாசகம் முற்றோதல் செய்து … Read more