துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி, துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் ஐ.நா. உலக பருவநிலை உச்சி மாநாடு நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 180 நாடுகளின் தலைவர்கள் மற்றும் 97 ஆயிரம் பங்கேற்பாளர்கள், நிபுணர்கள் மற்றும் பருவநிலை மாறுபாடு ஆர்வலர்கள் என மொத்தம் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்திய பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாநாட்டில் கலந்து கொண்டார். தொடர்ந்து துபாய் பால்ம் பகுதியில் … Read more

புரோ கபடி லீக் சீசன் 10; நாளை ஆரம்பம்!

ஆமதாபாத், 10-வது புரோ கபடி லீக் தொடர் ஆமதாபாத்தில் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் நாளை நடைபெற உள்ள தொடரின் முதலாவது ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. … Read more

'எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்' – ராணுவத்திற்கு உத்தரவிட்ட வடகொரிய அதிபர்

பியாங்யாங், வடகொரியாவில் விமானப்படை வீரர்கள் தினத்தையொட்டி, அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தனது மகளுடன் விமானப்படை தலைமையகத்திற்கு நேரில் சென்றார். இதைத் தொடர்ந்து விமானப்படை வீரர்கள் வான் சாகசங்களை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியின்போது, போர் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கிம் ஜாங் உன் வெளியிட்டார். எதிரிகளின் அனைத்து வகையான தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு வடகொரிய ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டார். தினத்தந்தி Related Tags : North Korea  Kim Jong … Read more

Honda Cars – 2023 நவம்பரில் ஹோண்டா கார்ஸ் இந்தியா விற்பனை 24 % உயர்வு

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு நவம்பர் 2023ல் 24 % வளர்ச்சி அடைந்து 8,734 வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 7,051 ஆக இருந்தது. ஹோண்டா எலிவேட் எஸ்யூவி இந்தியா மட்டுமல்லாமல் ஏற்றுமதி சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. Honda cars sales report November 2023 ஹோண்டா கார் ஏற்றுமதி நான்கு மடங்கு அதிகரித்து 3,161 யூனிட்களாக இருந்தது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 726 … Read more

தஞ்சாவூர்: தலைக்கேறிய மதுபோதை; தன்பாலின உறவில் ஈடுபடுத்தி, இளைஞர் கொடூரக் கொலை – இருவர் கைது

தஞ்சாவூர் அருகே உள்ள பசுபதிகோவில் பகுதியை சேர்ந்தவர் விஜய் (22). இவர் தெருவில் கிடக்கும் காலி மதுப்பாட்டில்கள் பொறுக்கி விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி இரவு பட்டித்தோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் கிடந்த காலி மதுப்பாட்டில்களை பொறுக்கியுள்ளார். அப்போது சூலமங்கலம் பகுதியை சேர்ந்த சரவணன் (32), பரணி (31), விக்னேஷ் (26)ஆகிய மூன்று பேரும் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர்கள், விஜயிடம் … Read more

கலைத் துறையில் 'அஷ்டாவதானி' பத்மா சுப்ரமணியம்: சங்கீத நாடக அகாடமி தலைவர் சந்தியா புகழாரம்

சென்னை: பிரபல பரதநாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமணியத்தின் 80-வது பிறந்தநாளையொட்டி, ‘பத்மா 80’ என்ற விழா, சென்னை நாரதகான சபாவில் நேற்று முன்தினம்கொண்டாடப்பட்டது. நிருத்யோதயா, நாரத கான சபா, சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் – ஜானகி கலை, அறிவியல் மகளிர் கல்லூரி இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. இதில், பத்மா சுப்ரமணியத்தின் பரதக்கலை மேன்மை குறித்து சதாவதானி ஆர்.கணேஷ், அர்ஜுன் பரத்வாஜ் இணைந்து எழுதிய ‘நயன சவன’ எனும் ஆங்கில நூலை, சங்கீத நாடக … Read more

“உங்களிடம் டிராக்டர் இருக்கிறது; என்னிடம் சைக்கிள்கூட இல்லை” – பெண் விவசாயிடம் பிரதமர் நகைச்சுவை

புதுடெல்லி: வளர்ந்த இந்தியாவுக்கான சபத யாத்திரையை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். இதன்படி நாடு முழுவதும் எல்இடி திரைகளுடன் கூடிய சிறப்பு வேன்கள் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அரசு திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று முன்தினம் உரையாடினார். அப்போதுகாஷ்மீரின் ரங்பூர் கிராம பஞ்சாயத்து தலைவரும் பெண் விவசாயியுமான பல்வீர் கவுருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். … Read more

8 குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்: ரஷ்ய பெண்களுக்கு அதிபர் புதின் வலியுறுத்தல்

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற உலக ரஷ்ய மக்கள் கவுன்சில் கூட்டத்தில் புதின் கூறியுள்ளதாவது: நம் முன்னோர்கள் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொண்டு வலுவான தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களை உருவாக்குவது என்பது பாரம்பரிய வழக்கமாக இருந்தது. எங்கள் பாட்டி வம்சத்தில் ஏழு,எட்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தையை பெற்று வளர்த்துள்ளனர். இந்த மரபைநினைவில் கொண்டு இன்றைய இளம் தலைமுறை பெண்களும் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்று குறைந்து வரும் … Read more

அமலாக்கத்துறை அதிகாரிக்கு 15 நாள் சிறை… ED அலுவலகங்களில் DVAC ரெய்டு தொடரும்…

பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக கூறி அரசு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த விவகாரத்தில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் திண்டுகல்லில் நேற்று கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் இதுபோன்று பலரை மிரட்டி லஞ்சம் பெற்று சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், மதுரை மற்றும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறையைச் … Read more