18 மொழிகளில் வெளியாகும் ஜெயம் ரவி படம்

புதுமுக இயக்குனர் அர்ஜுனன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜீனி'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25வது படமாக தயாராகி வருகிறது. கிரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி ஆகியோர் கதாநாயகியாக இந்த படத்தில் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ரூ. 100 கோடி பொருட்செலவில் இப்படம் உருவாகுவதால் இந்த படத்தை 18 மொழிகளில் உலகளவில் வெளியிட … Read more

Kamal Haasan – பாலிவுட் நடிகரிடம் கையை பிடித்து கெஞ்சிய கமல் ஹாசன்?.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) பாலிவுட் நடிகர் திலீப்குமாரின் கையை பிடித்து கமல் ஹாசன் கெஞ்சிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். இரண்டாவது இன்னிங்ஸின் முதல் படமே பெரும் வெற்றி பெற்று 500 கோடி ரூபாயை வசூலித்தது. படத்தை பார்த்த அனைவருமே ஆண்டவரின் நடிப்பு இன்னமும்

சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.2 ஆயிரத்து 319 கோடி வருவாய் – தெற்கு ரெயில்வே

சென்னை, உள்நாட்டு சரக்கு போக்குவரத்தில் குறைந்த செலவிலும், விரைவாகவும் செல்லும் வகையில் ரெயில் போக்குவரத்து விளங்குகிறது. இந்த சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த தெற்கு ரெயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், சரக்கு போக்குவரத்து மூலம் நடப்பு நிதியாண்டில் மட்டும் அதாவது கடந்த 8 மாதங்களில் 26.082 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது. இதன் மூலம், தெற்கு ரெயில்வே ரூ.2 ஆயிரத்து 319 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதேபோல, … Read more

ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா அதிரடி…இந்தியா 174 ரன்கள் குவிப்பு..!

ராய்ப்பூர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகள் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கெய்க்வாட் … Read more

191-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான விலங்கு

அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூர தீவான செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆமை, உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்றுள்ளது. அந்த ஆமையின் பெயர் ஜோனாதன். கி.பி. 1832ஆம் ஆண்டு பிறந்ததாக கணிக்கப்பட்டுள்ள இந்த ஆமையானது, 1882-ல் செசல்சில் இருந்து செயின்ட் ஹெலனா தீவுக்குக் கொண்டு வரப்பட்டது. வயதானாலும் சுறுசுறுப்புடன் வலம் வரும் ஜோனாதன், இந்த ஆண்டு 191வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோவை கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. Jonathan the tortoise … Read more

திண்டுக்கல் | ரூ.20 லட்சம் லஞ்ச பணத்துடன் காரில் சென்ற அமலாக்க துறை அதிகாரி கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்துடன் காரில் சென்ற அமலாக்கத் துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விரட்டிச் சென்று கைது செய்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிபவர் மருத்துவர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. ஆனால், இந்த வழக்கில் இருந்து சுரேஷ்பாபு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும், … Read more

முதல்வரை நேரில் அழைத்து பேசி தீர்வு காண ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் உள்ள முட்டுக்கட்டையை ஆளுநர் தரப்புதான் தீர்க்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக முதல்வரை நேரில் அழைத்துப் பேசி பிரச்சினைக்கு ஆளுநர் தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தியுள்ளார். ‘தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்டமசோதாக்கள் மற்றும் அரசின் கொள்கைமுடிவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்துள்ளார். எனவே, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு … Read more

உயர்நீதிமன்றம் சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தைகள் திருமணம் குறித்து பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் நடத்துவதையொட்டி அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரண்யா  உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “குழந்தை திருமணங்களை தடுக்க இந்திய அரசு பல்வேறு கொள்கைகளையும், சட்டங்களையும் வகுத்துள்ளது. 1929-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் 1978-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, பெண்களுக்கான திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டது. இந்த வயது வரம்பை 21 ஆக உயர்த்தும் வகையில் கடந்த 2021-ம் … Read more

அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து இடையூறு செய்தார் ஞானவேல் ராஜா : அமீர் வெளியிட்ட புதிய தகவல்

பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குனர் அமீருக்கும், படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே நடைபெற்று வந்த வழக்கு மற்றும் கருத்து வேறுபாடுகள் கடந்த சில நாட்களாகவே ஒவ்வொன்றாக தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஒரு பக்கம் அமீருக்கு ஆதரவாக பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் தங்களது குரலை ஒலித்து வருகின்றனர். அமீரை தேவையில்லாமல் விமர்சித்து அதன்பிறகு பல பக்கங்களில் இருந்து கண்டனம் வந்ததும் வருத்தம் கேட்பதாக கூறி கைஎழுத்திடப்படாத ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைதியாகிவிட்டார் ஞானவேல் … Read more