Month: December 2023
Bigg Boss Tamil Eviction: ஜோவிகா எஸ்கேப்பாம்.. அப்போ அவுட்டாக போறது டைட்டில் வின்னர் தானா?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜோவிகா தான் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருந்து வந்தார் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், கடைசி நேர ட்விஸ்ட்டாக இந்த வாரமும் ஜோவிகா காப்பாற்றப்பட்டுள்ளார் என்றும் இன்னொரு போட்டியாளர் தான் நாளை நடக்கும் ஷூட்டிங்கில் வெளியேறுவார் என்றே தகவல்கள் கசிந்து விட்டன. பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே
Tata motors Sales – நவம்பர் 2023ல் டாடா மோட்டார்ஸ் விற்பனை 1.73 % சரிந்தது
இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நவம்பர் 2023ல் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 74,172 ஆக பதிவு செய்துள்ளது. 2022 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 75,478 ஆக பதிவு செய்துள்ளது. உள்நாட்டில் 2022 நவம்பரில் 73,467 யூனிட்களுடன் ஒப்பிடும்போது மொத்த உள்நாட்டு விற்பனை கடந்த மாதம் 72,647 யூனிட்டுகளாக இருந்த டாடா மோட்டார்ஸ் விற்பனை 1 % சரிந்துள்ளது. Tata Motors Sales Report November 2023 டாடாவின் பயணிகள் வாகன … Read more
`டியூட்டி டைம் முடிஞ்சிருச்சு'- ரயிலை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்ற ஓட்டுநர்; 2,500 பயணிகள் அவதி!
பயணிகள் ரயிலின் ஓட்டுநரும், பாதுகாப்பு காவலரும் தங்களின் வேலைநேரம் முடிந்துவிட்டது என, ரயிலை பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, சத் பூஜையை முன்னிட்டு சஹர்சா டு புதுடெல்லி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த ரயில் திட்டமிட்டபடி நவம்பர் 27-ம் தேதி இரவு 7:30 மணிக்கு சஹர்சாவிலிருந்து புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தாமதமாக நவம்பர் 28-ம் தேதி காலை 9:30 மணிக்குத்தான் சஹர்சாவிலிருந்து புறப்பட்டது. … Read more
மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை: டிசம்பர் 2 முதல் 4-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவினர் நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் என அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை / கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் அரசு நிர்வாகம் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டு முன்னெச்சரிக்கை … Read more
“காலநிலை மாற்றம் தொடர்பான COP33 உச்சி மாநாட்டை நடத்த இந்தியா தயார்” – துபாயில் பிரதமர் மோடி அறிவிப்பு
துபாய்: காலநிலை மாற்றம் தொடர்பான COP33 உச்சி மாநாட்டை 2028-ம் ஆண்டு நடத்த இந்தியா தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. Conference of the Parties(COP) என்பது 1992-ம் ஆண்டு ஐ.நா சபையில் காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் உச்சி மாநாட்டை குறிப்பதாகும். துபாயில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா … Read more
இங்கிலாந்தில் பயின்று வந்த இந்திய மாணவர் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்பு
லண்டன்: இங்கிலாந்தில் கடந்த மாதம் காணாமல் போன 23 வயது இந்திய மாணவர் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மித்குமார் படேல் மேற்படிப்புக்காக கடந்த செப்டம்பர் 19ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றுள்ளார். ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அவருக்கு இடம் கிடைத்துள்ளது. மேலும், அமேசானில் பகுதி நேர வேலையும் கிடைத்துள்ளது. இதையடுத்து, கடந்த நவம்பர் 20-ஆம் தேதி மித்குமார் படேல் ஷெஃபீல்டுக்கு செல்ல இருந்தார். இந்நிலையில், நவம்பர் 17-ம் தேதி மித்குமார் … Read more
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?
Jigarthanda DoubleX OTT Release Date: சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், ஓடிடியில் வெளியாக உள்ளது.
எண்ணூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு – மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் மிக்ஜாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதுடன், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விராட் கோலி 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு? பிசிசிஐ போடும் கண்டிஷன்
இந்திய அணி அடுத்து வரும் 20 ஓவர் உலக கோப்பையை கண் வைத்துள்ளது. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற எந்தவொரு ஐசிசி கோப்பைகளையும் இந்தியா வெல்லவில்லை. இந்த தீராத சோகம் அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையிலும் தொடர்ந்தது. தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இது பெரும் சோகம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கொடுத்தது. இந்த சூழலில் அடுத்த ஐசிசி கோப்பையை வென்றுவிட … Read more