அரசு வேலை கிடைத்த இளைஞரை 24 மணி நேரத்தில் கடத்தி துப்பாக்கி முனையில் கட்டாய கல்யாணம்

பாட்னா: பீகார் மாநிலத்தில் அரசு வேலை கிடைத்த இளைஞரை 24 மணி நேரத்தில் கடத்தி துப்பாக்கி முனையில் தன் மகளுக்கு தாலி கட்ட வைத்துள்ளார் செங்கல் சூளை அதிபர். வேலை உள்ள இளைஞர்களை கடத்தி கட்டாய கல்யாணம் செய்யும் சம்பவங்கள் பீகாரில் அடிக்கடி நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் நிறைய ஆண்கள் பெண் கிடைக்காமல் கடும் வேதனையில் இருக்கிறார்கள். Source Link

What are the conditions for traveling to Malaysia without a visa? | விசா இல்லாமல் மலேசியா செல்வதற்கு என்ன நிபந்தனைகள்?

புதுடில்லி: இன்று (டிச.,1) முதல் விசா இன்றி இந்திய சுற்றுலா பயணிகள் மலேசியா செல்லலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்காக சில நிபந்தனைகளை மலேசிய அரசு அறிவித்துள்ளது. மலேசியா தங்கள் நாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் உலக சுற்றுலா பயணிகளில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ள சீனா, இந்தியா நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு டிச.,1 (இன்று) முதல் 2024 டிசம்பர் வரை விசா தேவை இல்லை என்றும், அவர்கள் 30 நாட்கள் வரை தங்கள் நாட்டில் … Read more

ஐஎம்டிபி தரவரிசை பட்டியல் : முதலிடத்தில் ‛ஜவான்', லியோவுக்கு 4, ஜெயிலருக்கு 6வது இடம்

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிரபலங்கள் பற்றிய தகவல்களுக்கான உலகின் மிகவும் பிரபலமான இணையதளம் ஐஎம்டிபி. தியேட்டர்களில், ஓடிடி தளங்கில் பார்க்கும் மக்களின் எண்ணிக்கையை வைத்து அதனை படத்திற்கான ஆதரவாக கொண்டு தரவரிசை பட்டியலை இந்த அமைப்பு வெளியிடும். அதன்படி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரையிலான படங்களின் தரவரிசை பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி தியேட்டர்களில் வெளியான படத்தில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கி ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படம் முதலிடத்தை … Read more

Vladimir Putin Urges Russian Women To Have 8 Or More Children | 8 பிள்ளைகளை பெத்துக்கோங்க: ரஷ்ய அதிபர் புடின் கெஞ்சல்

மாஸ்கோ: ரஷ்யாவில் மக்கள் தொகை சரிவை சந்தித்துவரும் சூழலில் ஒவ்வொரு பெண்களும் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தியுள்ளார். மக்கள் தொகை, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகை சரிவு மிகப்பெரிய பிரச்னையாகி உள்ளது. அந்த வகையில் ரஷ்யாவும், இப்போது மக்கள் தொகை சரிவால் பிரச்னையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. அங்கு 1990 முதல் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. மேலும், உக்ரைன் … Read more

Annapoorani Review: சோறு முக்கியம் தான்.. ஆனால், சுவையாவும் இருக்கணும்ல.. அன்னபூரணி விமர்சனம்!

நடிகர்கள்: நயன்தாரா, ஜெய், சத்யராஜ்இசை: தமன்இயக்கம்: நிலேஷ் கிருஷ்ணா சென்னை: இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படமாக இன்று ரிலீஸ் ஆகி உள்ள படம் தான் அன்னபூரணி. சமையல் கடவுள் என சப்டைட்டில் எல்லாம் போட்டு படத்திற்கு பெரும் பில்டப் கொடுத்தாலும், சுவையான உணவாக இல்லை என்பது தான் பெரிய

Ola escooters – ஒரே மாதத்தில் முதல்முறையாக 30,000 ஸ்கூட்டரை விற்பனை செய்த ஓலா எலக்ட்ரிக்

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் முதல்முறையாக ஒரே மாதத்தில் 30,000 விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளதாக ஓலா நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் 25 % பங்களிப்பை ஓலா நிறுவனம் பெற்றுள்ளது. Ola Electric Sales Report November 2023 ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்பொழுது சந்தையில் புதிய S1 ஏர் மற்றும் S1X  ஆகியவற்றுடன் S1 புரோ என மூன்று மாடல்களை பெற்றுள்ளது. … Read more

இந்திய உயர்ஸ்தானிகர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயம்

  கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மை தாங்கிய கோபால் பாக்லே அவர்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு (29) விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் ,மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி எட்வேட் புஸ்பகாந்தன் உள்ளிட்ட வைத்திய குழுவினருடன் வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் குறித்து கலந்துரையாடினர். குறித்த கலந்துரையாடலில் முக்கியமாக வைத்தியசாலையின் நீண்டகாலத் தேவையான விபத்து … Read more

70 வயதில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த பெண்… “குழந்தை இல்லாததால் கேலிக்கு உள்ளானேன்" என உருக்கம்

உகாண்டாவை சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளார். சஃபினா நமுக்வயா (Safina Namukwaya) என்ற பெண்ணுக்கு 70 வயதாகிறது. இவருக்கு உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் IVF சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கருத்தரிப்பு மையத்தில் சிசேரியன் மூலம் ஓர் ஆண் மற்றும் பெண் குழந்தையை புதன்கிழமையன்று பெற்றெடுத்தார். இவருக்கு 2020-ல் பெண் குழந்தை பிறந்தது. இது இவரின் இரண்டாவது பிரசவம்.   செயற்கை கருவுறுதல் 70’s Vs 90’s லூட்டீஸ்: “நாங்கல்லாம் அந்தக் … Read more

வானிலை முன்னெச்சரிக்கை: வடதமிழகம், டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: “அடுத்து வரும் 4 தினங்களைப் பொறுத்தவரை, வடதமிழக மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 3-ம் தேதி திருவள்ளூர், சென்னை தொடங்கி கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்” என்று … Read more

ராஜஸ்தானில் 1993 முதல் காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சிக்கு வரும் போக்கு மாறுமா?

புதுடெல்லி: ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 1993 முதல் நிலவும் நடைமுறையில் மாற்றம் வருமா என ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. ஏனெனில், இம்மாநிலத்தில் காங்கிரஸ் ஒருமுறை, பாஜக மறுமுறை என மாறி, மாறி ஆட்சிக்கு வருகின்றன. ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள், டிசம்பர் 3-ல் வெளியாக உள்ளன. இந்த முறை தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை நம்பி உள்ளார்.பாஜகவோ தமது பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய ஆட்சியை நம்பி … Read more