இந்திய உயர்ஸ்தானிகர் நெடுந்தீவிக்கான விஜயம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நெடுந்தீவிக்கான விஜயத்தினை நேற்றையதினம் (30) மேற்கொண்டிருந்தார்.   இதன்போது நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் உயர்ஸ்தானிகருக்கான வரவேற்பளிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கான உலர் உணவுப் பொருட்களும் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன. பிரதேச கடற்போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினையும் குடிநீர் தேவையை சீராக்கும் வகையில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றையும் பெற்று தருமாறு நெடுந்திய பிரதேச செயலாளர் உயர்திரு எப்.சி.சத்தியசோதி அவர்களால் கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டது. மேலும் நெடுந்தீவு மேற்கு பகுதியில் … Read more

“சாதி பேதமற்ற திராவிடர்களாக ஒன்றிணைய போராடியவர்” – அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை திறந்த முதல்வர் பேச்சு

சென்னை: ”தமிழன், திராவிடன் சொற்களை அடையாளச் சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசப் பண்டிதர். அவருடைய சிந்தனைகள், இரவு பகலற்ற ஒளியாக இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன்படவேண்டும்” என்று அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இது குறித்த செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.1) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் ரூ.2.49 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் … Read more

ஒடிசாவில் லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து: 8 பேர் உயிரிழப்பு

பாட்னா: ஒடிசா மாநிலம் கியோன்ஞ்சர் மாவட்டத்தில் பக்தர்கள் சென்ற வேன் ஒன்று, சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்கு உள்ளானது. இதில், 8 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான வேனில் பெண்கள், குழந்தைகள் உட்பட 21 பக்தர்கள் பயணம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் வாடகை வேன் ஒன்றை அமர்த்திக்கொண்டு, தங்கள் பகுதியில் இருந்து 400 கி.மீ. தொலைவில் இருக்கும் கடாகோனில் உள்ள தாரணி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த வேன் … Read more

“2024 அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கப் போவதில்லை” – எலான் மஸ்க்

வாஷிங்டன்: வரவிருக்கும் 2024 அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அதிரடியாக தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தின் உரிமையாளரும், உலக பணக்காரருமான எலான் மஸ்க் அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிவருவது வழக்கம். இந்த நிலையில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு புதன்கிழமை ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. அந்த பேட்டியில் எலான் மஸ்க்,” 2024 நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை என்னால் … Read more

Bomb Threat: பெங்களூருவில் உள்ள 20 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Bomb Threat In Bengaluru School: பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பள்ளி நிர்வாகம்.

மிக்ஜாம் புயல்: 12 மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு

மிக்ஜாம் புயல் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்த இருக்கும் நிலையில், அதன் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் 12 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முதலமைச்சர் முக ஸ்டாலின் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.   

தமிழ்நாட்டுக்கு 2ந்தேதி முதல் 5ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தமிழ்நாட்டுக்கு டிசம்பர் முதல் வரும் 5ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள புயலுக்கு ‘மிக்ஜாம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புயல் சென்னை மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த  புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

ஆளுதாங்க பார்க்க மிரட்டலானவர்.. மனசு குழந்தையை போல்.. மனம் தாங்காமல் அழுத அமைச்சர் காந்தி!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சர்வந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், உடல் உறுப்புகள் தானத்தால் 5 பேருக்கு வாழ்வளித்துவிட்டு சென்ற நிகழ்வு அமைச்சர் காந்தியை கண் கலங்க வைத்துவிட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் சர்வந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த அருள் -பரிமளா தம்பதியின் மகன் ராகவேந்திரா கடந்த 18ஆம் தேதி இரவு சாலை விபத்தில் சிக்கி Source Link

Call the Chief Minister and find a solution: Supreme Court instructs the Governor | முதல்வரை அழைத்து பேசி தீர்வு காணுங்கள்: கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடில்லி: ‘கவர்னர் – முதல்வர் இடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. எனவே, முதல்வரை கவர்னர் அழைத்து பேசி தீர்வுகாண வேண்டும்; இல்லையெனில் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்’ என தமிழக கவர்னருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு கவர்னருக்கு … Read more