தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' படம் 5 வருடங்களுக்கு பிறகு கடந்த 24ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் தொடர்பாக நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு முடியாததாலும், கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட நிதி பிரச்னையாலும் படம் வெளிவரவில்லை. தற்போது வருகிற 8ம் தேதி வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு பார்வை. நிறைய கனவு. உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவையே பேப்பரில் … Read more

Animal Review: அப்பாவுக்காக மிருகமாகும் ரன்பீர் கபூர்.. சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் விமர்சனம்!

நடிகர்கள்: ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர்இசை: விஷால் மிஸ்ரா, ஜானி, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், மனன் பரத்வாஜ், ஜாம்ப், ஸ்ரேயாஸ் புரானிக், அசிம் கெம்சன்ரன் டைம்: 3 மணி நேரம் 21 நிமிடங்கள்இயக்கம்: சந்தீப் ரெட்டி வங்கா   சென்னை: அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில்

நவம்பர் 2023ல் மஹிந்திரா வாகனங்களின் விற்பனை 21 % வளர்ச்சி – Mahindra Sales Report Novmber 2023

கடந்த நவம்பர் 2023 மாதந்திர விற்பனையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஏற்றுமதி உட்பட 21 சதவிகித வளர்ச்சி அடைந்து 70,576 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஸ்கார்பியோ மாடலுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் உட்பட 2.8 லட்சத்திற்கும் அதிகமான எஸ்யூவிகளை இன்னும் டெலிவரி செய்யவில்லை என்று நவம்பர் மாதம் முன்னதாக கார் தயாரிப்பாளர் குறிப்பிட்டிருந்தது. Mahindra Sales Report November 2023 மஹிந்திரா எஸ்யூவி வாகனங்கள் பிரிவில், மஹிந்திரா உள்நாட்டு … Read more

கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.   இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி சுமார் 20 பில்லியன் ரூபா கடனுதவி வழங்க இணங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், உரிய கடன் தொகை கிடைத்த பின்னர் வீதிப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடக … Read more

அவசர சிகிச்சை, ஒன்றரை மணி நேரம் தாமதம்…. குழந்தை இறப்புக்கு காரணமான நிம்ஹான்ஸ் மருத்துவமனை..!

பெங்களூரூவின் நிம்ஹான்ஸ் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் உயிர் பறிபோனதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிக்கமகளூருவில் உள்ள பசவனகுடியைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் ஜோதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. வீட்டில் நான்கு அடி உயரத்தில் இருந்து குழந்தை விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. முதலில் குழந்தையை ஹாசன் மருத்துவ அறிவியல் கழகத்திற்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ்க்கு (தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம்) அழைத்துச் … Read more

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகள், அமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். அந்தமான் அருகே உருவாகி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையிலிருந்து 800 கிலோமீட்டர், புதுசேரியிலிருந்து 700 கி.மீ கிழக்கே மையம் கொண்டிருக்கிறது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி … Read more

தேர்தல் ஆணையம் விரும்பும்போது தேர்தல் நடத்த தயார்: காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா

ஜம்மு: தலைமைத் தேர்தல் ஆணையம் விரும்பும்போது யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில் தேர்தலை நடத்த நிர்வாகம் தயாராக இருப்பதாக அம்மாநிலத் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலை நடத்திய பின்பே மாநிலத்தை விட்டு வெளியேறுவேன் என்றும் அவர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய துணைநிலை ஆளுநர் மனோஜ் கூறியதாவது: “ஜம்மு காஷ்மீரில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் கேட்ட அனைத்து விவரங்களும் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தலைமைத் … Read more

புயல் எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை

சென்னை: வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவாவதால், 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில், நாளை மிக்ஜாம் புயலாக மாறி, டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கும் ஆந்திராவின் மசுலிப்பட்டினத்துக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் கணிப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கைப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மழை … Read more

சத்தமே இல்லாமல் 'சரித்திரம்'.. இலங்கை- தமிழகம் இடையே தரைவழிப் பாலம் கட்டுவது குறித்து ஜரூர் ஆய்வு!

யாழ்ப்பாணம்: இலங்கையின் தலைமன்னார் மற்றும் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி இடையே தரைவழிப் பாலம் கட்டுவது தொடர்பான ஆய்வு நடைபெற்று வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே வடக்கு பகுதியான யாழ்ப்பாணம், தலைமன்னார் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். Source Link