நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிக்கும் படம் காதலிக்க நேரமில்லை. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. அந்த போஸ்டரில் நித்யா மேனன் பெயருக்கு பிறகு ஜெயம் ரவியின் பெயர் இடம் பெற்றிருந்தது. இதை அடுத்து தவறுதலாக இது நடைபெற்று விட்டதோ? என்கிற கேள்விகளும் எழுந்தது. இப்படியான நிலையில் தற்போது படக் குழு வட்டாரத்தில் அது குறித்து ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால், இந்த காதலிக்க … Read more

ஆத்தி.. ஹார்ட்டுல என்ன ஆடு மேயுது.. வாமிகா கபியை பார்த்து சும்மா ஜூம் பண்ணும் ஃபேன்ஸ்!

சென்னை: ஜப் வி மெட் படத்தில் சிறுமியாக நடிக்க ஆரம்பித்த வாமிகா கபி பல இந்தி படங்களில் நடித்து வந்த நிலையில், தமிழில் மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இந்தி படங்கள் மற்றும் வெப்சீரிஸ் என பிசியாகி விட்ட அவர் மீண்டும் மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் இடம்பெற்ற நினைவோ ஒரு பறவை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நாளை நடக்கிறது அனைத்துக்கட்சி கூட்டம்

புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 11ம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் நடைபெற்றது. இதையடுத்து, நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. 19 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 15 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. அத்துடன் 18 மசோதாக்கள் உள்பட முக்கிய அலுவல்களை … Read more

நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான வங்காளதேச கிரிக்கெட் அணி அறிவிப்பு!

டாக்கா, வங்காளதேச அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் வங்காளதேசம் அடுத்ததாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அங்கு அந்நாட்டிற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான வங்காளதேச அணிக்கு நஜ்முல் ஹொசைன் சாண்டோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கமாட்டேன் – எலான் மஸ்க்

வாஷிங்டன், 2024 தேர்தலில் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை தன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்று உலக கோடீஸ்வரரும், டெஸ்லா நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் கூறினார். எலான் மஸ்க் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் கருத்துகள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்தவகையில் `நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், வெள்ளை மாளிகையில் நடைபெறும் மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாட்டில் … Read more

Bajaj Chetak Urbane – ₹ 1.15 லட்சத்தில் 2024 பஜாஜ் சேட்டக் அர்பன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2024 சேட்டக் அர்பேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டெக்பேக் மற்றும் ஸ்டாண்டர்டு என இரு விதமாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டெக்பேக் வேரியண்டில் கூடுதல் வேகம் மற்றும் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது. முந்தைய மாடலை விட கூடுதல் வேகம் மற்றும் ரேஞ்ச் வெளிப்படுத்தும் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. தோற்ற அமைப்பில் வசதிகளில் பெரிதாக மாற்றமில்லாமல் வந்துள்ளது. 2024 Bajaj Chetak Urbane சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் 3 கட்ட PMSM மோட்டார் அதிகபட்சமாக … Read more

நாட்டின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 டிசம்பர் 01ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 30ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, வடமத்திய, … Read more

Tamil News Today Live: ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்கு: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர் நீதிமன்றம்

ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்கு: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர் நீதிமன்றம் சென்னை தீவுத் திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது. சென்னை தீவுத் திடலை சுற்றி டிசம்பர் 9, 10 தேதிகளில் தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக ஃபார்முலா 4 கார் பந்தய போட்டி நடத்தப்படவுள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் தனி பந்தய தளம் இருக்கும் நிலையில், … Read more

சென்னையில் மருந்தகம், மருத்துவமனைகளுக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள், நோயாளிகள் அவதி

சென்னை: சென்னையில் மருந்தகம், மருத்துவமனைகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள், நோயாளிகள் அவதியடைந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் கன மழை கொட்டி தீர்த்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. பல இடங்களில், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிஅடைந்தனர். அதேபோல், பல இடங்களில் மழை நீர் மருத்துவமனை வளாகத்திலும் தேங்கிய தால் … Read more