நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்: கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்

சென்னை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் நாளை காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதில், பொருத்தப்பட்டுள்ள `எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது. விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான `நெபுலா’ உள்ளிட்டவற்றை ஆராய உள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இதுதவிர … Read more

டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுகிறார் – சுனில் கவாஸ்கர்

டெல்லி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய … Read more

இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள துணை மாவட்டமான அபேபுராவிலிருந்து வடகிழக்கே 162 கிலோமீட்டர் (101 மைல்) தொலைவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் நடந்தது. இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம், சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்று கூறியது, … Read more

கர்நாடகா: `ரூ.6.96 கோடி செலுத்துங்கள்… இல்லையேல் சிறைதான்!' – அமைச்சருக்கு நீதிமன்றம் உத்தரவு!

கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகிப்பவர் எஸ்.பி மது சந்திரா என்ற எஸ்.மது பங்காரப்பா. இவர் ஆகாஷ் ஆடியோ-வீடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரூ.6.96 கோடிக்கான காசோலையை 2011-ம் ஆண்டு இவர் வழங்கியிருக்கிறார். ஆனால் அது பவுன்ஸாகி இருக்கிறது. இது தொடர்பாக ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தது. மது பங்காரப்பா மது பங்காரப்பா ரூ.50 லட்சம் செலுத்தப்பட்டுவிட்டதால், இந்த … Read more

நடிகர் விஜயகாந்த்துக்கு மதுரையில் சிலை வைக்க காங்கிரஸ் கோரிக்கை – பரிசீலிப்பதாக மேயர் தகவல்

மதுரை: மதுரையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்துக்கு சிலை வைக்க, காங்கிரஸ் எம்பி, மாணிக்கம் தாகூர் மற்றும் அக்கட்சியின் மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவை அரசு கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிப்பதாக மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார். தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28-ம் தேதி மறைந்தார். அவரது மறைவையொட்டி, அவரது சொந்த ஊரான மதுரையில் தேமுதிகவினர் மட்டுமில்லாது பொதுமக்கள் பொதுஇடங்களில் அவரது உருவப்படத்தை அலங்கரித்து அஞ்சலி செலுத்தினர். … Read more

புல்வாமா மற்றும் ராமர் கோயிலை அரசியல் ஆதாயத்துக்காக பாஜக பயன்படுத்துகிறது : காங். அமைச்சர் குற்றச்சாட்டு

சித்ரதுர்கா (கர்நாடகா): புல்வாமா தாக்குதலை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திய பாஜக, அயோத்தி ராமர் கோயில் திறப்பிலும் அதே யுக்தியை கையாளுகிறது என்று கர்நாடக அமைச்சர் தசரதைய்யா சுதாகர் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக காங்கிரஸ் அரசின் திட்டமிடல் மற்றும் புள்ளியியல்துறை அமைச்சர் தசரதைய்யா சுதாகர், சித்ரதுர்காவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது புல்வாமா தீவிரவாத தாக்குதலை வாக்குக்காக பாஜக அரசு பயன்படுத்தியது. இந்த முறை அந்த இடத்தில் ராமரின் … Read more

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், கோபி மற்றும் சுதாகர் நடித்துள்ள ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது.  

எண்ணூர் போராட்டம்… இன்னொரு ஸ்டெர்லைட் போராட்டமாக மாறிவிடக்கூடாது – சவுக்கு சங்கர்!

Savukku Shankar Latest News: இன்னொரு ஸ்டெர்லைட் போராட்டமாக எண்ணூர் போராட்டம் மாறிவிடகூடாது என போராட்டக்காரர்களை சந்தித்த பின் அரசியல் விமர்சகராக அறியப்படும் சவுக்கு சங்கர் பேட்டி அளித்துள்ளார். 

இந்திய அணியால் எதையும் வெல்ல முடியாது… முன்னாள் இங்கிலாந்து வீரர் பகீர்!

India National Cricket Team: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலியா சேனலான Fox Sports-இல் கிரிக்கெட் குறித்த விவாதம் நடைபெற்றது. அதில், முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கெல் வாகன் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் ஆகியோர் பங்கேற்றனர். அந்த விவாத்தின்போது, கிரிக்கெட்டை பொறுத்தவரை உலகிலேயே மிகவும் பின்தங்கிய அணிகளில் இந்தியாவும் ஒன்று என்று நினைக்கிறீர்களா என மார்க் வாவிடம் (Mark Vaugh) வான் கேள்வி கேட்டார். மார்க் இதற்கு … Read more

Thalapathy68FirstLook : `Greatest Of All Time' வெளியானது 'தளபதி 68' அப்டேட்!

‘லியோ’வுக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் எனப் பறந்த யூனிட், அடுத்தும் அதிரடியான லொகேஷன்களில் படமாக்கவிருக்கிறது. விஜய்யின் சமீபத்திய படங்களான ‘வாரிசு’, ‘லியோ’ படங்களைப் போல, ‘தளபதி 68’ படத்திலும் பிரசாந்த், பிரபு தேவா, ‘மைக்’ மோகன், சினேகா, லைலா, மீனாக்ஷி சௌத்ரி, ஜெயராம், யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ்  என பெரும் … Read more