கடைசி டி20 போட்டி: வங்காளதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி…!

மவுண்ட் மவுங்கானுய், வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றிபெற்றது. மழை காரணமாக 2வது டி20 போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்று … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கானின் 2 வேட்புமனுக்களும் ரத்து

லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார். இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் … Read more

அமெரிக்கா: விலையுயர்ந்த மாளிகையில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்! – போலீஸ் விசாரணை

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா வம்சாவளி தம்பதியான ராகேஷ் கமல் (57), டீனா (54), 2019-ம் ஆண்டு EduNova என்ற கல்வி அமைப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, நடத்தி வந்தனர். இவர்களுக்கு அரியானா (18 ) என்ற மகள் இருந்தார். டோவர் நகரில் 11 படுக்கையறைகள் உடன் 19 ஆயிரம் சதுர அடி பரப்பில், 5 மில்லியன் டாலர், அதாவது 41 கோடி ரூபாய் மதிப்புடைய ஒரு மாளிகையை 2019-ம் ஆண்டு இந்தத் தம்பதி வாங்கினர். அதில் குடும்பத்துடன் வசித்து … Read more

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வா? – ரத்து செய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு பதவி உயர்வு வழங்கியதை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. இந்த அறிக்கை பல்வேறு குற்றங்களை வெளிக் கொண்டு வந்தது. அன்றைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், தென் மண்டல ஐஜி … Read more

தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்குத் தடை – அமித் ஷா அறிவிப்பு

புதுடெல்லி: தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்குத் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தெஹ்ரீக் இ ஹூரியத் ஜம்மு காஷ்மீர் அமைப்பு சட்டவிரோதமானது என அறிவிக்கப்படுகிறது. இந்த அமைப்பு ஜம்மு காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து இஸ்லாமிய ஆட்சியை நிறுவ தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரங்களைச் செய்வது, பிரிவினையை … Read more

அயலான் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு

Sivakarthikeyan Salary In Ayalaan: அயலான் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளமாக இவ்வளவு வாங்கியுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் டெஸ்லா கார்… ஆச்சர்யத்தில் உறைந்த நெட்டிசன்கள் – பின்னணி என்ன?

Tesla Car In Bangalore: போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பெங்களூரு நகரில் டெஸ்லா நிறுவனத்தின் SUV காரான, X மாடல் கார் காணப்பட்டுள்ளது. பெங்களூருவில் காணப்பட்ட அந்த காரின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. அதுசார்ந்த இரண்டு புகைப்படங்கள் X தளத்தில் பகிரப்பட்டன.     ஒன்று போக்குவரத்து சிக்னலில் கார் நிறுத்தப்பட்டது, மற்றொன்று நகர்ந்துகொண்டிருக்கும் புகைப்படமாகும். இந்தியாவில் டெஸ்லா கார்களை அறிமுகப்படுத்துவதற்கு இது ஒரு முன்னோடியாக இருக்கலாம் என்று இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, … Read more

மோடி பக்தர்கள் பைத்தியக்காரர்களா? கொந்தளித்த சுப்பிரமணியன் சாமி.. பரபர சண்டை.. என்ன நடந்தது?

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் விஷயத்தில் மோடியின் பக்தர்கள் என்ன பைத்தியக்காரர்களா? என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கேட்டுள்ளதோடு, தன்னை விமர்சனம் செய்வோருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து பணம் செல்கிறதா? என்பது போல் கேள்வியும் எழுப்பி உள்ளார். பல ஆண்டுகளாக நடந்த சட்ட போராட்டத்தை தொடர்ந்து அயோத்தி பிரச்சனைக்கு கடந்த 2019ல் தீர்வு Source Link

Eshwarappa is busy getting seat for his son | மகனுக்கு சீட் பெறுவதில் ஈஸ்வரப்பா மும்முரம்

ஹூப்பள்ளி : சட்டசபை தேர்தலின் போது, ஷிவமொகா தொகுதியில் போட்டியிட ஈஸ்வரப்பா விரும்பினார். ஆனால், மூத்தவர்களுக்கு சீட் இல்லையென, பா.ஜ., மேலிடம் கூறியதால், ‘தேர்தல் அரசியல் ஓய்வு’ அறிவித்தார். தன் மகன் காந்தேஷுக்கு சீட் எதிர்பார்த்தார். ஆனால் மகேஷ் டெங்கினகாய்க்கு சீட் கிடைத்தது. சில மாதங்களாக அமைதியாக இருந்த ஈஸ்வரப்பா, லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியலில் சுறுசுறுப்படைந்துள்ளார். ஹாவேரி தொகுதியில் சீட் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மத்திய தலைவர்களுடன் நிரந்தர தொடர்பில் உள்ளார். ஹூப்பள்ளியின் மயூரா … Read more