‛தி கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம்' : விஜய் – வெங்கட்பிரபு படத்திற்கு ஆங்கில தலைப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், வைபவ் உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, டர்க்கி, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது வருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மிக ஆவலோடு காத்திருந்த விஜய் 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. அதில் ‛தி கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம்' என்ற ஆங்கில தலைப்புடன், விஜய் இருவிதமான கெட்அப்களில் வருவதுபோல் இடம்பெற்றுள்ளது. இப்போஸ்டர் விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.