சென்னை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசு தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இன்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அமைச்சர், ‘தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்கள் சமீபத்தில் இயற்கை பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்டன. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு தமிழக அரசு 6,000 ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது. ஆட்சிக்கு வந்தபோது கடும் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு […]