சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்கலையொட்டி வரும் 12ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் முன்னதாக தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளதாக இருந்த நிலையில் படத்தின் சிஜி வேலைகள் நிறைவடையாததால் தற்போது பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
