New kia sonet Mileage – 2024 கியா சொனெட் எஸ்யூவி மைலேஜ் விபரம் வெளியானது

கியா இந்தியாவின் புதிய சொனெட் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரின் மைலேஜ் விபரம் வெளியாகியுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் முதல்நிலை ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெற்றதாக வந்துள்ளது. அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

சொனெட்டில் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின்,  1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டதாக வரவுள்ளது.

2024 Kia Sonet Mileage

சோனெட்டில் இடம்பெற்றுள்ள 82 hp பவர் மற்றும் 115Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது 5-ஸ்பீடு மேனுவல் கொடுக்கப்பட்டுள்ளது. துவக்க நிலை 1.2 லிட்டர் மேனுவல் மாடல் மைலேஜ் 18.83kmpl ஆகும்.

இரண்டாவதாக உள்ள 118 hp பவர் மற்றும் 172Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் GDI 6-ஸ்பீடு iMT மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கிடைக்கும். இதன் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் லிட்டருக்கு 18.70 கிமீ வழங்கும், அடுத்து 7 வேக DCT கியர்பாக்ஸ் மைலேஜ் 19.20kmpl ஆகும்.

இறுதியாக, 114 hp பவர் மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 6 வேக மேனுவல், 6-ஸ்பீடு iMT மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் வரவுள்ளது. டீசல் என்ஜினில் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் (iMT) பெற்ற வேரியண்ட் லிட்டருக்கு 22.30 கிமீ ஆகவும், அடுத்து 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மைலேஜ் 18.60kmpl ஆகும். இதில் 6 வேக மேனுவல் மாடலின் மைலேஜ் தற்பொழுது அறிவிக்கப்பட்டவில்லை.

2024 கியா சொனெட் மைலேஜ்
1.2-litre petrol 5MT 18.83kmpl
1.0-litre petrol 6MT 18.70kmpl
1.0-litre petrol 7DCT 19.20kmpl
1.5-litre diesel 6iMT 22.30kmpl
1.5-litre diesel 6MT TBA
1.5-litre diesel 6AT 18.60kmpl

டெக் லைன், GT லைன் மற்றும் X-Line என மூன்று விதமான பிரிக்கப்பட்டு HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line ஆகிய 7 வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது.  தற்பொழுது ரூ.25,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் விற்பனைக்கு விரைவில் வெளியாக உள்ளது.

டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, மாருதி பிரெஸ்ஸா, ரெனால்ட் கிகர், மாருதி ஃபிரான்க்ஸ், நிசான் மேக்னைட் மற்றும் வரவிருக்கும் டொயோட்டா டைசோர் ஆகியவற்றை 4 மீட்டருக்கு உட்பட்ட எஸ்யூவி பிரிவில் கியா சொனெட்டை எதிர்கொள்ளுகின்றன.

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.